சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயகம் எங்கும் உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் இன்று காலை நினைவேந்தல் ஆரம்பமானது. ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.