யானையிடம் மரம் சோரம் போகவில்லை

அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலுமே, ஐக்கிய தேசியக் கட்சியோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றதென அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, சம்மாந்துறையில் நேற்று இரவு இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில இடங்களில் மரச் சின்னத்தில் தனித்தும், அம்பாறை மாவட்டம் உட்பட இன்னும் சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து யானை சின்னத்திலும், ஒரு சில இடங்களில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிலும் மற்றும் சில இடங்களில் துஆ எனும் ஜனநாயக ஐக்கிய முன்னணியிலும் இணைந்து நான்கு விதமாக போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிட வேண்டுமென்ற முடிவானது, மிகவும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு எல்லோராலும் எடுக்கப்பட்ட முடிவு எனவும், இந்த இணைப்பின் மூலம் எமது கட்சிக்கு கிடைக்கின்ற வாக்குகளைக் கூட்டிக் கொள்வதற்குத் தேவையான வியூகங்களை வகுப்பதற்காகவே தவிர, ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் எதனையும் அடகு வைக்கவில்லை என்பதை மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புவதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு