கடற்தொழிலாளர்களுக்கான அறிவுறுத்தல்

கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்பதனால் கடற்தொழிலில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் நுவரெலியா, இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் பிரதேசங்களில் 70 கிலோமீற்றருக்கும் 80 கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட வேகத்தில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு