வெளியாகின உயர்தரப் பெறுபேறுகள் – ஹாட்லி கல்லூரி மாணவன் முதலிடம்

2017ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளியான பெறுபேறுகளுக்கு அமைய, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். குறித்த மாணவன் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், அவரின் இஸற் புள்ளி 2.7343 ஆகும்.

2017ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அவர்களின் பெறுபேறுகள் தொடர்பில் திருப்தியடையாத பட்சத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை இம்முறை 02 இலட்சத்து 53,483 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 163,104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான அனுமதி பெற்றிருப்பதுடன், பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் சம்பந்தமாக தகவல்கள் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் 0112 784208, 0112 784537 என்ற இலக்கங்களுக்கோ அல்லது 1911 என்ற அவசர இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு