கிளாலியில் மண் அகழ்வைத் தடுக்கக் கோரி போராட்டம்

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள கிளாலி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வைத் தடுக்கக் கோரி கிராமவாசி ஒருவர் கூரை மீது ஏறி போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

நேற்று காலை முதல் இரவு வரை கிளாலி பாடசாலைக்கு முன்பாகவுள்ள பச்சிலைப்பள்ளி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கிளையின் கூரை மீது ஏறி திருச்செல்வம் இராஜேஸ்வரன் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

கிராமத்திலுள்ள ஒருவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பாரியளவில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும், இவர் அரசியல் கட்சி ஒன்றினதும், பொலிஸாரினரதும் ஆதரவுடன் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டப்படுகிறது.

கடல் மட்டத்தை விடவும் ஆழமாக மணல் அகழப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் கடல்நீர் கிராமங்களுக்கு உட்புகுந்து கிராமம் உவராக மாற்றமடையக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள முல்லைத்தீவுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்தும் அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எனவேதான் இறுதியாக தான் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்து போராட்டத்தை மேற்கொள்வமதாக திருச்செல்வம் இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு