முதலிடத்திலுள்ள மாணவர்களின் விபரம்

நடைபெற்று முடிந்த 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் அதிக புள்ளிகளுடன் சிறந்த பெறுபேற்றை மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி திலினி சந்துனிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதுடன பௌதீக விஞ்ஞான பிரிவில் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதுதவிர மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் துலானி ரசந்திகா என்ற மாணவி வர்ததகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ள அதேவேளை, கொழும்பு சென். போல்ஸ் மகளிர் பாடசாலையை சேர்ந்த பாத்திமா அகிலா இஸ்வர் வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அதேவேளை இரத்னபுரி சத்தர்மாலங்கார பிரிவெனா கல்விக் கூடத்தின் பத்பெரியெ முனிந்தவங்கச தேரர் கலைப் பீடத்தில் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு