பாம்பு தீண்டி 400 பேர் பலி

இலங்கையில் வருடத்திற்கு 400 பேர் பாம்பு தீண்டுவதால் உயிரிழப்பதாக களனி பல்கலைக்கழகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பாம்பு தீண்டுதலுக்கு இலக்காகி வருடாந்தம் 80,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் சகல வைத்தியசாலைகள், வைத்திய மத்திய நிலையங்கள், ஆயுர்வேத நிலையங்கள் என்பவற்றை மையப்படுத்தியே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக களனி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பாம்பு தீண்டலுக்கு இலக்காகி பாதிக்கப்படுபவர்களுக்காக வருடாந்தம் 1.5 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு