இந்திய மீனவர்கள் விடுவிப்பு

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 மீனவர்கள் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் இவர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விடுவிக்கப்பட்டுள்ள மீனவர்களின் 07 படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மின்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 57 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுள் 37 மீனவர்களின் விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை என்பதால் இவர்களை விடுவிக்க முடியாதநிலை காணப்படுவதாக வடமாகாண உதவி மீன்பிடி பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு