02 மரக்கன்றுகள் நாட்டத் திட்டம்

2019ஆம் ஆண்டு நாடு முழுவதும் 02 கோடி மரக்கன்றுகளை நடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

“உலகை குணப்படுத்தும் தினம்” வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு கோட்டை சேமா நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்ததுடன், சகல பிரஜைகளும் ஏதாவது ஒரு தாவரத்தை நடுவது அவசியம் என்றும், எதிர்காலத்தில் முகங்கொடுக்கவுள்ள சுற்றாடல் மாற்றத்துக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.

நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ஆன்மிக வேலைத்திட்டமானது ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இது 66 உலக நாடுகளில் நடைபெறவுள்ளதாகவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு