2018ஆம் ஆண்டு முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
எனினும், 58 பாடசாலைகள் ஜனவரி மாதம் 13ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் எனவும், நடந்து முடிந்த சாதாரண தர பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட குறித்த 58 பாடசாலைகளும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.