பளையில் துப்பாக்கிச்சூடு – இளைஞர் படுகாயம்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (08) இரவு 8.10 மணியளவில் பளை நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் (வயது 38) என்பவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுஇ மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சூட்டுச் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு