கடந்த வருடங்களில் தராதவற்றைத் தாருங்கள்

வடமாகாண முதலமைச்சர் நிதியம் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த வருடத்திலாவது வடமாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதுடன், புதுவருடத்திற்கும் புதிய அரசாங்கங்களுக்குமிடையில் ஒற்றுமைகள் உள்ளதாக தெரிவித்த அவர், சகல புதிய அரசாங்கங்களும் ஆரம்ப காலத்தில் சிறப்பாக இயங்கும். ஆனால் பின்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதால் மக்களிடமிருந்துவரும் விமர்சனங்களால் ஆரம்ப காலத்தில் இயங்கியதுபோல் இயங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை 5ஆவது வருடத்திற்குள் நுழைந்திருக்கின்றது. இன்னும் சில மாதங்களே தாம் ஆட்சியில் இருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடந்தகாலத்தில் தமக்கு தரப்படாமல் இருந்தவற்றை இந்த வருடத்திலாவது தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு