தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருட காலப்பகுதியில் நாட்டின் அனைத்து துறைகளிலும், பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த காலப்பகுதியினுள், தற்போதைய அரசாங்கம் 16.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவணி கடன்களாக பெற்றுள்ளதுடன், பிணை முறி கொடுக்கல் வாங்கல் மூலம் இந்த அரசாங்கம் பாரிய மோசடியை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.