இதுவரை 78 முறைப்பாடுகள் பதிவு

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதுவரை 78 முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கடந்த டிசெம்பர் 9ஆம் திகதி முதல் நேற்று வரை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 37 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்களின் பெயர்ப் பட்டியல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்களிப்புக்காக 5 லட்சத்து 60 ஆயிரத்து 536 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், தேர்தல் காரியாலயம், மாவட்ட செயலாளர் காரியாலயம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் என்பனவற்றில் எதிர்வரும் 22ஆம் திகதி தபால்மூலமான வாக்களிப்புக்களை மேற்கொள்ள முடியும் எனவும், ஏனைய அரச சேவையாளர்கள் எதிர்வரும் 25, 26ஆம் திகதிகளில், தபால்மூலம் வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு