கடத்திச் செல்லப்பட்டவர் பொலிசாரால் மீட்பு

கடந்த 6ஆம் திகதி கடத்தி செல்லப்பட்ட திருகோணமலையை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மகன் கம்பஹா மிரிஸ்வத்த பிரதேசத்தில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் மீட்கப்பட்ட குறித்த இளைஞனிடம் இன்று வாக்குமூலம் பெறுவதற்காக திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

திருகோணமலை 4ஆவது மைல்கல் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான குறித்த இளைஞன் கடந்த 6ஆம் திகதி இரவு தனது காதலியின் வீட்டிற்குச் சென்று திரும்பிய போது கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் திருகோணமலை பிரதேசத்தில் பாழடைந்த இடத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டது. குறித்த இளைஞரின் தந்தை அப்பகுதியின் பிரபல வர்த்தகர் என்பதுடன், அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கடத்தப்பட்ட இளைஞனின் தாயிடம் சிலர் தொலைபேசி ஊடாக அழைத்து, தந்தை தொடர்பான தகவல்கள் சிலவற்றை பெறுவதற்கே மகன் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு