தபால் சேவை விஸ்தரிப்புக்கு புதிய மறுசீரமைப்புத் திட்டம்

தபால் திணைக்களத்தின் சேவையை விஸ்தரித்து, அதனை மேலும் மக்களுக்கு பயனுள்ளதாக வழங்குவது தொடர்பான புதிய மறுசீரமைப்புத் திட்டம், தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக, தபால் சேவைகள் மற்றும் இஸ்லாமிய மத விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் செயற்படும் பொருளாதார விவகாரம் தொடர்பான குழுவின் பணிப்புரைக்கு அமைய, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன்மூலம் தபால் திணைக்களத்தில் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, இலாபம் பெறக்கூடிய நிறுவனமாக அதனை மாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில், தபால்மா அதிபர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு