தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் இருவர் காணாமல் போயுள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாகவும், வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த கப்பலுடன், குறித்த மீனவப் படகு மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.