ஓய்வூதிய சான்றிதழ்கள் அனுப்பி வைப்பு

வலி. மேற்கு சங்கானைப் பிரதேச செயலக ஓய்வூதியர்களுக்கு 2018ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஓய்வூதியக் கொடுப்பனவு விபரங்கள் தொலைபேசியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ஓய்வூதியர்கள் வதிவிடச் சான்றிதழுடன் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கிராம அலுவலரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கையடக்கத் தொலைபேசிக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு விபரங்கள் அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதன் இலக்கத்தைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சமர்ப்பிப்பதற்குத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் ஏப்ரலிலிருந்து ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு