சர்வதேச நிதியத்தின் ஆணையைக் கோருகிறது இலங்கை

இலங்கை மத்திய வங்கியினை சர்வதேச தரத்துடனான நடைமுறைக்கு அமைய மாற்றுவது குறித்து, சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையை அரசாங்கம் கோரியுள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாணய சட்டத்தினை மாற்றுவது அல்லது புதியதொரு சட்டவாக்கத்தை மேற்கொள்வதா என்பது பற்றி தீர்மானிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய முறி தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் போது, இலங்கை மத்திய வங்கி தொடர்பாக பல பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர், அவரின் அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் சில பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த பரிந்துரைகள் நாடாளுமன்றத்தின் பார்வைக்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு