டெங்கினால் மாணவர்களே அதிகம் பாதிப்பு

டெங்கு தொற்று காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிக பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாடசாலை சுற்றாடலை சுத்தமாக பேணுவதற்கு, பாடசாலை அதிபர்களுக்கு முழு அதிகாரமளிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, பாடசாலையின் சுற்றாடலை சுத்தம் செய்ய, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களை இணைத்துக் கொண்டு பணியாற்ற முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலை சுற்றாடலை சுத்தம் செய்வதன் பொருட்டு அதிபர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாடசாலை சுற்றாடலை சுத்தமாக பேணாத அதிபர்கள் இருப்பின் அது தொடர்பில், கல்வி அமைச்சின் கவனத்திற்கு உடன் கொண்டுவருமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு