கொழும்பு மாநகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் நவீன கணனி மயப்படுத்தப்படவுள்ளது.
மக்களுக்கு விரைவான சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கியும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இந்த பணியை முன்னெடுக்கும் நிலையில், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, திட்டமிடல் பிரிவு மற்றும் நிதிப் பிரிவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.