முறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு, கையூட்டல் விசாரணை ஆணைக்குழு தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலித்து வருகின்றது.
கடந்த 10ஆம் திகதி முறி மோசடி குறித்த ஜனாதிபதியின் அறிக்கை கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவின் உயர்மட்ட குழுவிற்கு கையளிக்கப்பட்ட நிலையில், இந்த பரிசீலனைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.