இராணுவத்தால் பெரும் பாதிப்பு

இராணுவம் வடக்கில் நிலைகொண்டுள்ளதால், தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், யுத்தத்தால் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ள வடக்கு தமிழ் மக்கள் தற்போதைய நிலையிலும் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் ஒன்று இடம்பெறாத நிலையிலும் இராணுவத்தினர் வடக்கில் தங்கியிருக்கின்றமையால் தமிழ் மக்களின் காணிகள் மக்கள் பயன்பாட்டுக்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு