வேட்பு மனுக்கள் நிராகரிப்பு தொடர்பில் இன்று ஆராய்வு

வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 8 மனுக்கள் இன்று ஆராயப்படவுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட கட்சிகள் சிலவற்றினால் மஹரகம நகர சபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அவைகள் நிராகரிக்கப்பட்டமையை எதிர்த்து நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, தெஹியத்த கண்டிய பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுக்கல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரிப்பதற்கு சட்டரீதியான அடிப்படைகள் இல்லாத காரணத்தினால் அதனை நிராகரிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு