வடகொரியாவின் நிலைப்பாட்டில் மாற்றம்?

வடகொரியாவில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, சீனாவின் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு ஜனாதிபதிகளுக்குமிடையில் தொலைபேசி இடம்பெற்ற உரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணுவாயுத சோதனைகளால் பிராந்திய ரீதியாக பெரும் பதற்ற நிலைமை காணப்பட்ட போதிலும், கடந்த இரண்டு வாரங்களாக, இந்த ஆண்டுக்கான பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளை மையப்படுத்தி, வடகொரியா தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்துள்ளதுடன், மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் வடகொரியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகள் அமைதிக்கு சாதகமான முன்னேற்றங்களென சீன ஜனாதிபதி க்சீ ஜின்பின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்த போதிலும், வடகொரியா மேலும் அணுவாயுத சோதனைகளை நடத்துவதை தடுப்பதற்காக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்களை சீனா வழங்க வேண்டுமென ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு