கட்சிகள் ஆட்சியமைக்க கூட்டணி அமைக்க நேரிடும்

இந்த முறை உள்ளூராட்சி தேர்தலில் எந்த கட்சியாலும் பெரும்பான்மை பலம்பெற முடியாதெனக் கூறப்படுவதால், கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணியை ஏற்படுத்த நேருமென பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், எந்த நாட்டிலும் இல்லாதவாறு இலங்கையின் தேர்தல் முறைமை உள்ளதாகவும், ஒருவகையில் அது நல்லதாக இருந்தாலும், ஜனநாயகம் முழுமையாக பின்பற்றப்படாத நாடாக இலங்கை இருப்பது, தேர்தல் முறைமையை பாதிக்கிறது. இந்த தேர்தல் முறைமையினால் அனைத்து கட்சிகளுக்கும் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தேர்தலுக்குப் பின்னர் கட்சித் தாவல்கள் என்பன நிகழக்கூடும் என்பது பாதகமான விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு