பிணைமுறி விசாரணை அறிக்கை தொடர்பில் சந்தேகம்

சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையானது, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட விசாரணை அறிக்கையேதானா என்று சந்தேகம் நிலவுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை நடத்திய தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரதி ஒன்று ரவி கருணாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதாகவும், இது குற்றவாளியைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு அந்த அறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதா? என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த அறிக்கை தொடர்பில் மஹிந்த அணியினரால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்ட போது, இந்த அறிக்கையில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க, அர்ஜுன் மகேந்திரன் போன்றவர்களுக்கு எதிராக இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தியதுடன், குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு முயற்சித்த பிரதமருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு