அமைதியாக இடம்பெற்றது தபால் வாக்களிப்பு

யாழ். மாவட்டத்தில் இன்று முதல் நாள் தபால்மூல வாக்குப்பதிவுகள் சுமூகமாக இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 17,273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று பொலிசார் மற்றும் யாழ். மாவட்ட செயலக ஊழியர்கள் தமது வக்குகளை மாவட்ட செயலகத்திலுள்ள தபால்மூல வாக்களிப்பு நிலையத்தில் தமது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

இதன்படி அடுத்தகட்டமாக எதிர்வரும் 25, 26ம் திகதி ஏனைய தபால்மூல வாக்காளர்கள் அந்தந்த பிரதேச செயலகங்களில் வாக்குகளைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அகிலன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு