வேட்பாளர்கள் உட்பட 20 பேர் கைது

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரங்கள் தொடர்பில், இரு வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறிய 11 சம்பவங்கள் தொடர்பிலும், தேர்தல் தொடர்பான 21 முறைப்பாடுகளுக்கு அமையவும் இவர்கள் கைதாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, கடந்த 9ஆம் திகதி முதல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்ட 95 சம்பவங்களும், 212 தேர்தல் முறைப்பாடுகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளதுடன், இது தொடர்பில் 27 வேட்பாளர்கள் உள்ளிட்ட 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு