கஞ்சாச் செடி வளர்த்தவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தக்காளிச் செடிக்குள் ஐந்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபர் ஒருவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று உத்தரவிட்டார்.

வெருகல், மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வீட்டில் மறைமுகமாக தக்காளிச் செடிக்குள் ஐந்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாக சேருநுவர போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு