இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைக்கவில்லையென நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து, விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு