இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

2017 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 24 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ள 5 பாடசாலைகள் இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளமைக்கு அமைவாக, கொழும்பு சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர வித்தியாலயம், மாத்தறை மத்திய கல்லூரி, குருணாகல் சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர கல்லூரி, கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி மற்றும் பதுளை ஊவா மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

இதேவேளை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள ஏனைய 19 பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த பாடசாலைகள் மூடப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரவணதாசன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு