கவச வாகனத்தில் சிக்கி மாணவி பலி – புங்குடுதீவில் சம்பவம்

கடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று (24) காலை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தினைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே கடற்படையின் வாகனம் மோதி விபத்துள்ளாகியுள்ளதில், மாணவி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவி, மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது, மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள கடற்படை முகாமிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மாணவி பலியான அதேவேளை, மாமனார் சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு