ஹெரோயின் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்தில் நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் போதை தடுப்பு பொலிஸ் பிரிவினரால் பொரள்ளை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து 51.88 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டு, ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதன்போது சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளியென மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க தீர்ப்பளித்துள்ளதுடன், குற்றவாளிக்கு எதிராக மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு