கொழும்பை வந்தடைந்தார் இந்தோனேஷிய ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இன்று இலங்கை வந்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அதேவேளை, முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும், குறித்த பேச்சுவார்த்தையின் போது, பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு போன்ற துறைகள் பற்றி முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு