பெப்ரவரி 9இல் வாக்கெண்ணும் பணிகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வாக்குகளை எண்ணும் போது பயன்படுத்தக்கூடிய முறைகள் குறித்தும், பாதுகாப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்கள் அனைத்தும் எதிர்வரும் 6ஆம் திகதி தமக்கு கிடைக்கப்பெறும் எனவும், அதனை தொடர்ந்து எதிர்வரும் 7ஆம் திகதி அவற்றை, ஒவ்வொரு பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு