அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமையே தற்போதைய நிலைக்குக் காரணம்

அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமையே இலங்கை அணியின் தற்போதைய நிலைக்குக் காரணமென அணித் தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீரர்கள் அடிக்கடி காயமடைந்து வருகின்றமையும், அனுபவம் வாய்ந்த வீரர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லாமையும், இலங்கை அணியின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாNதில் நடைபெறும் மும்முனை ஒருநாள் தொடரில் இலங்கை அணி இறுதி போட்டிக்கு தெரிவாவதற்கு முக்கியமான போட்டியில் இன்று விளையாடவுள்ளது. இந்ததொடரில் சிம்பாப்வே அணியுடன் ஒரே ஒரு போட்டியில் மாத்திரமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று பங்களாதேஸ{டன் மோதுகின்ற போட்டியில் வெற்றி அல்லது, சிறந்த ஓட்டப் பெறுமதியை பெற்றால் மாத்திரமே இறுதி போட்டிக்கு தகுதி பெறமுடியும் என்ற நிலையில் உள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சந்திமால், இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தங்களது நிலைமையை உணர்ந்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட பல வீரர்கள் அந்த அணிக்குப் பலமாக இருப்பதனாலேயே பங்களாதேஷ் அணி தற்போது சிறந்த அணியாக இருக்கிறது. அவ்வாறான வாய்ப்பு இலங்கை அணிக்கு இல்லை. இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் அடிக்கடி காயமடைவதால், அணியின் சமநிலையும் அதிகம் பாதிக்கப்படுகிறது என்றும் சந்திமால் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு