தேயிலைத் தரத்தை ஆராய விஷேட குழு

இலங்கையின் தேயிலைத் தரம் குறித்து ஆராய்வதற்காக ரஷ்யாவில் இருந்து விசேட குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.

நான்கு பேர் கொண்ட இந்த குழு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக, பெருந்தோட்டத் தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளதுடன், இந்த குழுவில் ரஷ்ய அரசாங்கத்தின், தாவர பூச்சுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கையில் உள்ள தாவர பூச்சுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையில் வண்டுகள் காணப்பட்டதாக எழுந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இலங்கையின் தேயிலைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், இரண்டு வாரக்காலப் பகுதியில் இந்த தடை நீக்கப்பட்டு, தற்போது மீண்டும் ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி இடம்பெற்று வரும் நிலையில், தேயிலையின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காகவே இந்த குழு இலங்கை வருகிறது.

இதேவேளை, வேலைத்திறன் கொண்ட இலங்கையர்களுக்கு கட்டாரில் வெள்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குமாறு இலங்கை கோருகிறது. இதற்காக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தினால் இன்று விசேட மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது. இதில் சுமார் 200க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களும், ஒழுங்கமைப்புகளும் கலந்து கொள்ளவிருப்பதாக கட்டாருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு