நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 08 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்றிரவு கடற்றொழிலில் ஈடுபட்டபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

அவர்களை, யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு