பெப்ரவரி 10இற்கு பின்னர் தேசிய வேலைத்திட்டம்

பெப்ரவரி 10ஆம் திகதியின் பின்னர், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், கட்சி பேதமின்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் தம்முடன் இந்த நடவடிக்கையில் இணைய முடியுமென அழைப்பு விடுத்துள்ளார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிரான புதிய நடவடிக்கையின்றி, இந்த நாட்டை சரிசெய்ய முடியாது எனவும், குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கி, புதிய சமுதாயத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு