சட்டவிரோதமாகச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

இந்த ஆண்டு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு படகு பயணங்களை மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கரைகடந்த ஏதிலிகள் அணுகல் திட்டத்தின் ஊடாக, சட்டவிரோத படகு பயணங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஒரு படகில் 29 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த போதும், அவர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டனர். அத்துடன் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகுமூலம் செல்ல தயாராக இருந்த பலர் கைது செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான நிலையில், இலங்கையர்கள் ஆட்கடத்தற்காரர்களால் போலியான உறுதிமொழிகளை வழங்கி, சட்டவிரோத படகு பயணத்துக்கு உள்ளாக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படும் நிலையில், சட்டவிரோத ஆட்கடத்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு, கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் எச்சரித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு