டெங்கு நோயினால் கடந்த 22 நாட்களில் 4,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காலப்பகுதியில் 04 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்திருப்பதாகவும், கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, அதற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் அதிக டெங்கு நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.