கடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்கெனக் கூறப்பட்டு, ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி, நில அளவைத் திணைக்களத்தினால் இன்று அளவீடு செய்யப்படவிருந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் காணி உரிமையாளர் உட்பட ஊர் பொது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அவதானத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, காணி அமைச்சர் மற்றும் நில அளவையாளர் நாயகம் ஆகியோருடன் தொடர்புகொண்டு நில அளவீட்டு செயற்பாட்டினை இடைநிறுத்தியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாட்டால் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவது இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு குறித்த பகுதி மக்கள் அவருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.