உள்நாட்டலுவல்கள் அமைச்சின் வேண்டுகோள்

நாட்டின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை அனைத்து அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதுடன், இம்முறை சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற வுள்ளதாக அவர் கூறியதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 70ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வின் போது விஷேட அதிதியாக பிரித்தானிய அரச குடும்பத்தை பிரதிநிதித்துவம் செய்து எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு