எதிர்காலத்தில் கடன் தேவையில்லை – பிரதமர்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இந்த நாட்டை, கடன் சுமையோடுதான் பொறுப்பேற்றதாகவும், இன்று கடன்கள் செலுத்தப்பட்டுள்ளதால், மோசமான பொருளாதார அபிவிருத்தி படிப்படியாக உயர்ந்துள்ள நிலையில், நாடு கடன் வாங்க வேண்டிய நிலையில் இப்போது இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுகின்றது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக 04 பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டு முதன் முறையாக தேர்தல் நடத்தப்படுகின்றது.

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், ஜீஎஸ்பி வரிச் சலுகை ஏற்றுமதி வரிச் சலுகை என்பன நிறுத்தப்பட்டிருந்தன. இன்று ஜீஎஸ்பி கிடைத்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த வருடம் மீன்பிடித் துறையின் வருமானம் 40 வீதமாக அதிகரித்துள்ளது. எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் எல்லா இடங்களிலும் ஏற்றுமதி வலயங்கள் அமையவுள்ளன.ஹம்பாந்தோட்டை முதல் கண்டி வரை ஏற்றுமதி வலயங்கள் உருவாகவுள்ளன. இதனால், வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். சுற்றுலாத்துறை, அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்த வேளையில், மலையகத்துக்கான விஜயத்தின் போது 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க உறுதியளித்துள்ளார். எனவே, 15 ஆயிரம் வீடுகள் அமையவுள்ளன. அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. சீமெந்து வீடுகள், தார் வீதிகள் மற்றும் கல்வி வசதிகளும் கிடைக்கவுள்ளன.

நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குறைகூறி விமர்சித்து வந்துள்ளோம். மக்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. அதற்கான ஆதங்கமே தவிர, நான் யாரையும் ஏசவில்லை. எம்மிடம் திட்டமும் இருக்கின்றது. நிதியும் இருக்கின்றது. 20120 வரை ஆட்சி நடத்த முடியுமென்றும் மேலும் தெரிவித்துள்ளார்.