நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக நாளை நண்பகல் 12.00 மணிக்கு கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத்தை கூட்டுவது சிறந்ததென பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும், நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள தேர்தல்கள் ஆணையாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு