ஊறுமலையில் தங்கம் மீட்பு

தலைமன்னார், ஊறுமலை பிரதேசத்திலிருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட இருந்த சுமார் 70 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் 2 சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கடற்படையினரால் மீட்கப்பட்ட தங்கம் சுமார் 12 கிலோ கிராம் எடையுடையதாகவும் அவை ஒவ்வொன்றும் 100 கிராம் பிஸ்கட் கட்டிகளாக பிரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், இந்த கடத்தலில் ஈடுபட்ட இருவரும் இலங்கையர்கள் எனவும் கைது செய்யப்பட்ட இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு