ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா காசல்ரீ நீர்த்தேக்கத்தில் அணைக்கட்டுக்கு அருகாமையில் இன்று காலை பொதுமக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலம் மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதேபிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவர் ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமற் போயிருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சடலம் காணாமல் போனதாகக் கருதப்படும் பெண்ணுடையதாக இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்படும் நிலையில், இப்பெண் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர்த்தேக்கத்தில் வீசப்பட்டுள்ளாரா என்பது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.