தமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதன் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளதுடன், தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.