ஆசிய அபிவிருத்தி வங்கியினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபையினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று முற்பகல் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் இலங்கை தொடர்பான செயற்பாட்டுக்குரிய குழுவின் தலைவர் சிரேஷ்டாபதி சிவராஜ் உள்ளிட்ட குழுவினரே ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் நிதியுதவி மற்றும் அவற்றால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களுக்கும் அனுசரணை வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாக பணிப்பாளர் சபையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு